வாணாபுரம் அருகே வடகீரனூர் கிராமத்தில் வடிகால் வாய்க்கால் தோண்டி பள்ளம் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் வடிகால் வாய்க்கால் மூடப்படவில்லை. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் அந்த வாய்க்காலில் விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் வாய்க்கால் மீது மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.