வாறுகால் வசதி வேண்டும்

Update: 2024-12-15 14:53 GMT

விருதுநகர் மாவட்டம் வாடி பஞ்சாயத்து சுந்தரலிங்கபுரம், செல்லையநாயக்கன்பட்டி கிராமத்தில் போதிய அளவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சாலை முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் சிலர் வீட்டிற்குள் தண்ணீர் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் போதிய வாறுகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்