பழனியில், கொட்டப்பட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அடைப்பை விரைவாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.