கழிவுநீர் கால்வாய் வேண்டும்

Update: 2024-12-08 14:02 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் தென்றல் நகர் 19-வது தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை. இதனால் கழிவுநீர் தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கழிவுநீரை பெருக்கெடுத்து ஓடும் பகுதி வழியாக செல்ல வேண்டிய அபாயகரமான நிலை உள்ளது. மேலும், கொசு தொல்லையுடன் துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்