சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊருணி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள வீரையன் கண்மாயில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?