மதுரை மாநகராட்சி வார்டு செல்லூர் கீழகைலாசபுரம் பகுதியில் பல நாட்களாகவே சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேங்கிய கழிவுநீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.