சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை கிராமம் மேல ரத வீதியில் கழிவுநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தேங்கிய கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை அகற்றவும், அப்பகுதியில் முறயைாக கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.