நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்திற்குள் தபால் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன் பகுதியில் கழிவறை கழிவுநீர் தொட்டியில் நிரம்பி வெளியேறுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதர சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், தபால் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதுடன், அதற்கு மூடி அமைத்திட வேண்டும்.