தென்தாமரைகுளம் ஐ.ஓ.பி. வங்கி தெரு, பனிமாதா கோவில் பின்பக்க தெரு மற்றும் மாற்றுத்திறனாளி பள்ளி போன்றவை அமைந்துள்ள பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் காணப்படுகிறது. இதனால், அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அந்த பகுதியில் வடியாமல் காணப்படும் மழைநீரை வெளியேற்றுவதுடன், அங்கு வடிகால் அமைத்திடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.