சிறுபாக்கம் ஊராட்சியில் குளத்துமேட்டிலிருந்து கடைவீதி வரை கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கவில்லை. இதனால் வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.