புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சிதம்பரம் கார்டன் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் தாழ்வான இடங்களில் கழிவுநீர் தேங்கிய நிற்பதுடன் சில நேரங்களில் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.