பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லியில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒட்டி கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் உடைந்து கிடக்கிறது. அத்துடன் அதற்கு மேல் மூடியும் இல்லை. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.