ஆபத்தான கழிவுநீர் தொட்டி

Update: 2024-11-17 11:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் மேற்கு பவளத்தால்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் மகளிர் சுகாதார வளாகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் அதன் அருகே சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டள்ள கழிவுநீர் தொட்டி உடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த கழிவுநீர் தொட்டியில் யாரேனும் தவறுதலாக விழுந்து, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மேலும் அந்த வழியில் செல்லும் மக்கள் கடும் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்