வடிகால் வசதி அவசியம்

Update: 2024-10-13 18:15 GMT
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பேரூராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரே மழைநீர் மற்றும் கழிவுநீரானது சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. முறையான வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீர் கலந்த மழைநீரினால் பள்ளி மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து வடிகால் வசதி அமைக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்