பாளையங்கோட்டை பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மூடியின் வழியாக கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.