செங்கல்பட்டு மாவட்டம், நெமிலிச்சேரி ஓம் சக்தி நகர் விரிவாக்கம் பகுதியில் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் வயதானோருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கடந்த 8 மாதங்களாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.