திருமயம் பகுதி ஆன்மீக சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. இதனால் தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இங்கு முறையான கழிவறை வசிகள் இல்லை. சுற்று பயணிகளின் வசதிக்காக மலைக்கோட்டை உள்புறத்திலும், கடையாபட்டி சாலையிலும் 2 கழிவறைகள் உள்ளது. இந்த கழிவறைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு உடனடியாக மூடப்படுகிறது என கூறப்படுகிறது. இதனால் அதிகாலையில், மாலை நேரங்களிலும் திருமயத்திற்கு சுற்று பயணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே கூடுதலாக கழிவறைகள் கட்டவும், வெகுநேரம் திறந்து வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.