காரிமங்கலம் தாலுகா வெள்ளையன் கொட்டாவூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறம் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் கழிவுநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.