திருச்செந்தூர் நகராட்சி பாரதியார் தெருவில் வாறுகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. இதனால் கொசுப்புழு உற்பத்தி மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.