தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகராட்சி 3-வது வார்டில் வணிக வைசியர் தெரு உள்ளது. இந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் தற்போது மணல் நிரம்பி கால்வாயும் சாலையும் ஒரே அளவில் உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்யும் போது தண்ணீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், பாலக்கோடு.