நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் பெரும்பாலான வார்டுகளில் வாறுகால் முறையாக தூர்வாரப்படாததால் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுப்புழு உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்.