ஆழ்வார்திருநகரி பேரூராட்சி அக்பர் தெருவில் புதிதாக வாறுகால் அமைக்கப்பட்டது. மேலும் பக்கத்து தெருக்களில் உள்ள கழிவுநீரும் இங்குள்ள தொட்டிக்கு வந்து வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த தொட்டியில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியே கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.