சாயக்கழிவுகளுக்கு தீவைப்பால் பொதுமக்கள் பாதிப்பு

Update: 2024-07-21 16:22 GMT

சாயக்கழிவுகளுக்கு தீவைப்பால் பொதுமக்கள் பாதிப்பு

திருப்பூர் புறநகர் பகுதிகளில் சாலையோரம் கட்டிடக்கழிவுகளும் சாயக்கழிவுகளும் கொட்டப்பட்டு வருவதால் காற்று மாசு அடைவதோடு, பல்வேறு தொற்று நோய்களும் பரவி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் நல்லூர் பகுதியில் இருந்து ஊத்துக்குளி சாலையை சென்றடையும் முக்கிய சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழியில் கோவில்கள், பள்ளிகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில். காசிபாளையம் பகுதியில் சாலையோரம் அப்பகுதியில் உள்ள பனியன் சாய கழிவுகளை கொட்டி சிலர் சட்டவிரோதமாக தீ வைத்து செல்கின்றனர். இதனால் காற்று மாசடைவதோடு அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் கண் எரிச்சல், மூச்சுத் திணறல், மற்றும் தலை சுற்றுதல் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், காசிபாளையம், திருப்பூர்

மேலும் செய்திகள்