திருச்செந்தூர் கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி சந்திப்பு பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிந்து பாதாள சாக்கடையில் செல்லும் இடத்தில் சிலர் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு அடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்கு குப்பைகளை கொட்டாதவாறு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.