தொண்டாமுத்தூர் அருகே கரடிமடை பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கனமழை பெய்யும்போது மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. அத்துடன் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.