பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவு நீர் தேக்கம்

Update: 2024-07-14 09:57 GMT

திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அருகே குப்பைகள் ரோட்டில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகள் கால்வாயின் உள்ளேயும் விழுந்து கால்வாயை அடைத்து கொள்கின்றன. குப்பையால் கால்வாயில் கழிவு நீர் பாய்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. அருகிேலயே ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் இங்கிருந்து வீசும் துர்நாற்றம் மற்றும் படையெடுக்கும் கொசுக்களால் சிகிச்சைக்கு வருவோரின் உடல் நலம் மேலும் பாதிக்கப்படுகிறது.

எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா?.


மேலும் செய்திகள்