நாகா்ேகாவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குருசடி சந்திப்பில் உள்ள ஒரு கடையின் முன்பு கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சாலையில் பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கழிவுநீர் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, குருசடி.