தரமற்ற சாக்கடை கால்வாய்

Update: 2024-05-19 15:52 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பையர்நத்தம் ஊராட்சியில் ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதுடன் உடையும் நிலையில் உள்ளது. மேலும் சாக்கடை கால்வாய் மீது சிமெண்டு சிலாப் அமைக்கப்படாததால் பொதுமக்கள் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் பணியை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தர்மலிங்கம், பையர்நத்தம்.

மேலும் செய்திகள்