கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஜிங்களூர் கிராமத்தில் விவசாய வடிகால் உள்ளது. இந்த வடிகால் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இந்த வடிகாலில் கழிவுநீர் திறந்துவிடப்படுவதுடன், குப்பைகளையும் சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் கால்வாயின் இரு கரையோரமும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பை கழிவுகள் தேங்கி நிற்கிறது. எனவே வடிகாலை தூர்வார வேண்டும் மற்றும் கழிவுநீர் வடிகாலில் கழிவுநீர் கலக்காத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.