காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி காலினியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் உள்ள தெருக்களில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால், கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.