கொடுமுடி புதிய பஸ் நிலையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. இது கடந்த 6 மாதங்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் வங்கிக்கு வரும் மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். மூக்கை பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.