கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தாலுகா ஜிக்கலூர் கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.