பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டுத்தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.