கரூர் மாவட்டம் வயலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரும் கலப்பதால் ஊருக்குள் கழிவுநீர் தேக்கமடைந்து கொசு தொல்லை அதிகரித்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வடிகால் வசதியை ஒழுங்குபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.