பெரியநெகமம்-தாராபுரம் சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.