சூலூர் மார்க்கெட் ரோட்டில் திருச்சி சாலையில் இருந்து அவினாசிக்கு செல்லும் பிரதான சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் தடுப்பு சுவர் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய்க்கு தடுப்பு சுவர் கட்டிக்கொடுக்க வேண்டும்.