வள்ளியூர் ரெயில்வே சுரங்கப்பாதை அருகில் உள்ள சர்வீஸ் சாலையின் இருபுறமும் உள்ள வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.