வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-11-05 11:12 GMT

பொள்ளாச்சி அருகே மணக்கடவு கிராமத்தில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதன் காரணமாக கனமழை பெய்யும்போது, மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அதோடு கழிவுநீரும் புகுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்