பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தருவதோடு, கழிவுநீரை அப்புறப்படுத்தி சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.