வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள வெற்றிலைக்காரத் தெருவில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். கால்வாய் மீது சிமெண்டு சிலாப் போடப்பட்டுள்ளதால் கழிவுநீர் சீராக ஓடவில்லை. நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கால்வாய் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-நவீன், வாலாஜா.