கலசபாக்கம் தாலுகா கடலாடி கிராமத்தில் பட்டிப்பந்தல் செல்லும் சாலையில் புதுத்தெருவில் கழிவுநீர் கால்வாய் இருந்தும், அதைத் தூர்வாராமல் உள்ளனர். மழைக் காலத்தில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் வழிந்தோடுகிறது. ஊராட்சி நிர்வாகமோ அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகமோ நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வார வேண்டும்.
-ரா.ஜெகநாதன், கடலாடி.