வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகில் இருந்து வேலூர் நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் சாரதிநகர் செல்லும் தெரு உள்ளது. இங்கு பைபாஸ் சாலை ஓரத்தில் உள்ள கால்வாய் மூடிகள் உடைந்து உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்டும்நிலை உள்ளது. எனவே கால்வாய் முடிகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.