ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் புதிதாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. குறுகிய தெரு என்பதால் கார்கள் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த சிமெண்டு சிலாப்களை மாற்றி அமைக்க வேண்டும்.
-மோகன், ஆம்பூர்.