ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பில் 5 இடங்களில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. குறுகிய தெரு என்பதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், ஆம்பூர்.