ஆம்பூர் ஏ.கஸ்பா அபுகான் தெருவில் புதிதாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்ட சிமெண்டு சிலாபில் 3 இடங்களில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் நடந்து, வாகனங்களில் செல்வோர் தவறி விழும் நிலை உள்ளது. சிறுவர், சிறுமிகள் தடுமாறி விழும் அச்சம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய சிமெண்டு சிலாப் போட வேண்டும்.
-சுதாகர், ஆம்பூர்.