பாளையங்கோட்டையில் புதுப்பித்து திறக்கப்பட்ட வ.உ.சி. மைதான வளாகத்தில் வாறுகால் கான்கிரீட் மூடி சேதமடைந்து துவாரம் விழுந்த நிலையில் உள்ளது. இதனால் மைதானத்தில் விளையாடும் வீரர், வீராங்கனைகள், சேதமடைந்த வாறுகாலில் தவறி விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த வாறுகால் கான்கிரீட் மூடியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.