சென்னை திருவொற்றியூர் ரெயில்வே கேட் முன்பாக சாலையின் இருபுறமும் சாக்கடை நீண்ட நாட்களாக திறந்த நிலையில் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பள்ளி மாணவ-மாணவியர் அதிகளவு நடந்து செல்லும் இப்பகுதியில் திறந்து கிடக்கும் சாக்கடையில் தவறி விழவும் வாய்ப்பும் உள்ளது. மாநகராட்சி கள ஆய்வு செய்து நிரந்த தீர்வு வழங்க வேண்டும்.