சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-20 11:01 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதன் அருகே பிரதான சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்கிறது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் தேங்கி நிற்கிறது. அதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதன் காரணமாக பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகிறது. அதை தவிர்க்க சாக்கடை கால்வாயை தூர்வார விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்