சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் பாதசாரிகள் மீது கழிவு நீரை வாரி இரைப்பது போன்ற சம்பவங்கள் தினம் தினம் நடக்கிறது. மேலும் தேங்கியே இருக்கும் கழிவுநீரால் கொசுக்களும் உற்பத்தியாகி வருகிறது. கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?