சேலம் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட இட்டேரி ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி ஆங்காங்கே வெளியேறுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே இந்தப் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.